புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கு செயற்குழு கூட்டம் இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் செயற்குழு கூட்டம் மற்றும் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான் வரவேற்றார் .
புதுக்கோட்டை மாவட்ட தனியார் மருத்துவமனகள் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சலீம் தஞ்சாவூரில் நடைபெற்ற கிழக்கு மண்டல இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி பேசுகையில்,
தமிழக அரசின் சட்டம் எண் 48/2008 படி எந்த ஒரு நபரும் தனியாகவோ கூட்டாகவோ மருத்துவமனை அல்லது மருத்துவ சேவை புரிவோர் மீது வன்முறையில் ஈடுபட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் நஷ்ட ஈடாக அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்ற சட்டத்தை அனைத்து மக்களுக்கும் தெரியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளில் உள்ள சேவைகள் மற்றும் உள் கட்டமைப்புகள் அவசரகால தொலைபேசி எண்கள் மக்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை மற்றும் தகவல் அளிப்பவர் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் திருச்சி காவேரி மருத்துவமனையின் மூத்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மதுசூதனன் பங்கேற்று, முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகளை அதனை எளிதில் அசைவுகள் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறையை திரை யின் மூலம் விளக்கினார்.
தொடர்ந்து எலும்பு மற்றும் இரத்தவியல் புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் சுப்பையா இரத்தத்தில் உள்ள அணுக்களை எளிதில் கண்டறிவது அதற்குண்டான நோய்களின் தன்மை போன்ற விவரங்களை பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார்.
தொடர் மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று வழங்கியவர் களுக்கு டாக்டர் தர்மபாலன், டாக்டர் இங்கர்சால் நினைவு பரிசு வழங்கினார்கள். கூட்டத்தில் மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள் நிதி செயலளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.