Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

பொன்னமராவதி சிதம்பரம் மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு மலேரியா டெங்கு கொரோனா விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி பள்ளியில் நடந்த தொற்று நோய் விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி பேருராட்சி சார்பில் சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மலேரியா, டெங்கு, கொரோனா  விழிப்புணர்வு  முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன்  பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் கபசூர குடிநீரை  வழங்கினார். செயல் அலுவலர் மு.செ.கணேசன் மற்றும் சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்று  சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் பேசுகையில், மாணவ மாணவிகள்  மலேரியா, டெங்கு காய்ச்சல், கொரோனா நோய் தொற்று  பரவாமல் தடுக்கும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து   விளக்கமாக எடுத்துரைத்தார். இதையொட்டி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக நகரச் செயலாளர் அழகப்பன், நகர அவைத்தலைவர் தெட்சணாமூர்த்தி, சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம்,கவுன்சிலர் நாகராஜன், பேரூராட்சி பேரூராட்சி டெங்கு களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top