Close
நவம்பர் 22, 2024 6:57 காலை

 இராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 313 வது மாநில கவுன்சில் கூட்டம்

புதுக்கோட்டை

இராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்திய மருத்துவ சங்க மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள்

இராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 313 -ஆவது மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

 இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 313வது மாநில கவுன்சில் கூட்டம் 19.06.2022 இராமநாதபுரத்தில்  நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் பழனிச்சாமி, செயலர் டாக்டர் தியாகராஜன் நிதி செயலாளர் டாக்டர் அழகா வெங்கடேசன் இராமநாதபுர இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ரவிந்திரராஜ், செயலர் டாக்டர் பரணிக் குமார், நிதி செயலாளர் டாக்டர் ரசிகலா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில்,  புதுக்கோட்டை கிளை சார்பாக தலைவர் டாக்டர் சுவாமிநாதன், செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான், நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ராஜா  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

  கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதிதாக கொண்டு வந்த விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவர்களுக்கு எதிராக உள்ள சட்ட திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அனைத்து மருத்துவர்களும் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இதுபற்றி தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்தை தமிழக அரசு விரைவில் மாற்றி அமைத்து வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top