Close
செப்டம்பர் 19, 2024 8:51 காலை

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க  புதிய நிர்வாகிகளுக்கு  புதுக்கோட்டை நிர்வாகிகள் பாராட்டு    

புதுக்கோட்டை

தமிழ் நாடு அரசு டாக்டர்கள்சங்க புதிய நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டைநிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்

தமிழ் நாடு அரசு டாக்டர்கள் சங்க  புதிய நிர்வாகிகளுக்கு  புதுக்கோட்டை  நிர்வாகிகள் பாராட்டு  தெரிவித்தனர்.                தமிழ்நாடுஅரசு டாக்டர்கள் சங்கத்தின் 2022 தேர்தல் மதுரையில்  நடைபெற்றது,  இதில்  மாநில தலைவராக டாக்டர் செந்தில், பொதுச் செயலாளராக டாக்டர் ரவிசங்கர், டி.எம்.இ செயலாளராக டாக்டர் ஸ்ரீதர், டி.எம்.எஸ் செயலாளராக டாக்டர் ஜஸ்லின், டி.பி.எச்  செயலாளராக டாக்டர் சினிவாசன், பொருளாளராக டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய  மாநில தலைவர்  டாக்டர் செந்தில் உள்ளிட்டோருக்கு  புதுக்கோட்டை தலைவர் டாக்டர் கே.எச். சலீம்,  டாக்டர் அப்துல் குத்துஸ், டி.எம்.எஸ் செயலாளர் பெரியசாமி, டி.பி.எச் புதுக்கோட்டை செயலாளர், பொன்சரவணன், டி.பி.எச் அறந்தாங்கி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் டாக்டர் நவரத்தினசாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top