Close
ஏப்ரல் 4, 2025 11:54 காலை

ஆலங்குடியில் திருச்சி அப்போலோ மருத்துவமனை-எஸ்பிஐ ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பில் இருதய சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை

ஆலங்குடியில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் எஸ்.பி.ஐ. ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இ-சேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளியில் எஸ்.பி.ஐ. ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை , ஆலங்குடி கோகுல் இ- சேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல சிறப்பு சிகிச்சை முகாமில், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை இருதய நல சிறப்பு டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் விக்னேஸ்வரன், அருண்குமார், அஜய்கிஷோர், ஆர்த்திஸ்ரீ, பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு 150 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., எக்கோ கார்டியோ கிராம் உள்ளிட்ட சோதனை செய்யப்பட்டது.

இதில், அப்போலோ பொதுநிலை மேலாளர் சமூவேல், மார்கெட்டிங் மேனேஜர் கோபிநாத், தனவேந்தன், ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைபள்ளி தாளாளர், பங்குதந்தை ஆர்,கே.சாமி, எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ் சேல்ஸ் மேனேஜர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top