Close
ஏப்ரல் 4, 2025 11:01 காலை

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு மருத்துவமுகாம்

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழுசார்பில்  பொற்பனைக்கோட்டை அருள்மிகு பொற்பனை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்  டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் செவிலியர்கள் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சந்திரன் ,ராம்குமார் ஆகியோர் பங்கேற்கு, பொதுமக்களுக்கு சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொரோனா டெஸ்ட், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் சேவையும் பயன்படுத்தப்பட்டது.  மருத்துவக்குழுவினருக்கு பொதுமக்கள்  பாராட்டுத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top