Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

இங்கிலாந்தில் அன்னையர் தினம்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

அன்னையர் தினம்

சிறுப்பிள்ளைகளாய் இருக்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களை, பல ஆண்டுகள் கழித்து பார்க்கிறபோது நமக்குள் ஒரு பரவசம் ஏற்படாமல் இருப்பதில்லை. அந்த பரவசத்தை ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு விதமாய் தருகிற முதல் ஜீவன் அம்மா.

இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் நான் பயன்படுத்திய, சாப்பாடு தட்டு, டம்ளர், கெண்டி, சங்கு, எழுத்து மேஜை, தொட்டில் கட்டை என பல சாமான்களை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என் அம்மா.

பல போகிப்பண்டிகைகள் கொண்டாடிய பிறகும்,ஈயம் பித்தளை, பழைய இரும்பு சாமான்களுக்கு பேரிட்சை பழம் என தெருக்களில் குரல் கேட்ட பிறகும், பழைய கூரை வீட்டை இடித்து மாடிவீடு கட்டிய பிறகும்..,தொலைப்பதற்கும், தொலைந்து விடுவதற்கும் பல சாத்தியக்கூறுகள் இருந்தும் இன்றுவரை பத்திரப்படுத்தி,என் பெயர் பொறித்தபூப்போட்ட சாப்பாட்டு தட்டை,விடுமுறைக்கு தாயகம் சென்ற போது, எடுத்து செல்லுமாறு அம்மா என்னிடம் கொடுத்தார்.

எதையும் தொலைக்காத அம்மாக்களை, எதற்காகவும் தொலைக்கக்கூடாது என்கிற வைராக்கியம் நமக்குள் கூடத்தான் செய்கிறது..அன்னையர் தின வாழ்த்துகள்

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top