கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர், பண்டைய ரோமில் சீசர் அகஸ்டஸ், தீயணைப்பு காவலரை உருவாக்க அழைப்பு விடுத்து, தீயணைப்புப் பணியில் புரட்சியை ஏற்படுத்தினார். விஜில்ஸ் என்று அழைக்கப்படும் அவர்களுக்கு போதுமான கருவிகள், பயிற்சியளிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது, காற்றின் திசை திடீரென மாறி தீயில் மூழ்கியதில், 5 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக இறந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தினம் உருவாக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் மே 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, ஏனெனில் அது செயிண்ட் ஃப்ளோரியன் தினம், ரோமானியப் பேரரசில் தீயணைப்புப் படையில் முதலாவதாக அறியப்பட்ட தளபதி செயின்ட் ஃப்ளோரியன் ஆவார். உலகெங்கிலும் உள்ள தீயணைப்பு வீரர்கள் இன்றும் பகிர்ந்து கொள்ளும் அதே மனிதாபிமான கருத்துக்களைப் பாதுகாப்பதற்காக அவர் தனது உயிரையும், அவரது சக ஊழியர்களையும் இழந்தார்.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் லிண்டன் நகரத்தில் ஏற்பட்ட துர்சம்பவம் தான், இந்த சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் உருவாக காரணமாக இருந்தது. உலகம் முழுவதையும் உலுக்கிய அந்த நிகழ்வு மிகவும் சோகமானது. அன்றைய நாளில் தீயணைப்பு வீரர்கள் புதருக்குள் புகுந்து தீயை கட்டுப்படுத்தினர். பரஸ்பர உதவிக்கு அழைப்பு விடுத்தனர். அந்த கணத்தில் அந்த வீரர்கள், நெருப்பு காவு வாங்க காத்திருக்கும் கோடூரத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேத்யூ ஆம்ஸ்ட்ராங், ஜேசன் தாமஸ், ஸ்டூவர்ட் டேவிட்சன், கிறிஸ் எவன்ஸ் மற்றும் கேரி வ்ரெட்வெல்ட் ஆகியோர் வாகனத்தில் ஏற்றப்பட்டனர், தீயணைப்பு குழுவின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்டனர். தீ ஜுவாலை சூழ்ந்த மண்டலத்திற்குள் செல்லும் போது, காற்று திடீரென திசையை மாற்றியது, இதன் விளைவாக வாகனம் தீப்பிடித்து எரிந்தது, ஐந்து வீரர்களும் தீக்கு இரை ஆயினர். தீயணைப்பு வீரர்கள் களத்தில் தங்கள் உயிரை இழந்த இந்த சோகமான நிகழ்வின் நினைவாக, தங்கள் உயிரை பணயம் வைத்து நம்மை பாதுகாக்கும் தீயணைப்பு வீரர்களை கொண்டாட ஒரு நாள் பிறந்தது.
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அதனுடன் தொடர்புடைய நீலம் மற்றும் சிவப்பு ரிப்பன் சின்னத்தைக் கொண்டதாகும். ரிப்பன் ஒரு செமீ அகலம் மற்றும் ஐந்து செமீ நீளம் வரை துல்லியமாக வெட்டப்பட்டது, இரண்டு வெவ்வேறு வண்ணங்கள் மேலே சேர்வது போல் ஜேஜே எட்மண்ட்ஸன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. நீலமானது தண்ணீரையும், சிவப்பானது நெருப்பையும் குறிக்கும் படியாக, வண்ணங்களுடன் தொடர்புடைய குறியீடாக உருவாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, அவசரகால சேவைகளுக்கான அடையாளமாக இந்த இரண்டு நிறங்களும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இதைவிட சிறந்த வண்ணத் தேர்வு இருக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது!
இந்த ரிப்பன் பொதுவாக மேலாடையில் மார்பு பகுதிக்கு அருகில் அணியப்படுகிறது. இருப்பினும் நமது சட்டை அல்லது தொப்பியில் அணியலாம். பலர் தங்கள் கார் கண்ணாடிகள் அல்லது ஜன்னல்கள் மற்றும் தங்கள் தோட்டத்தில் உள்ள மரங்களிலும் அவற்றை வைக்கிறார்கள். இந்த ரிப்பன்களை அணிவது உலகெங்கிலும் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு நம் ஆதரவை பிரதிபலிக்கும் எளிய வழியாக பார்க்கப்படுகின்றது.
இந்த நாளில் அற்புதமான தீயணைப்பு வீரர்களின் அசைக்க முடியாத துணிச்சல், தன்னலமற்ற தன்மை மற்றும் அவர்களின் சமூக அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவில் கொண்டு, அவர்களின் தியாகத்திற்கான நமது பாராட்டுகளை வெளிப்படுத்தி, பரிதாபமாக உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தீ பாதுகாப்பு கல்வி திட்டங்களை ஆதரிப்பது , புகை அலாரங்கள், தீயணைப்பான்கள் மற்றும் தீ விபத்து நடைபெறும் போது தப்பிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட தீ பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பது மிகவும் முக்கியமானது.
தீ பாதுகாப்பு பற்றி மக்களுக்குக் கற்பிப்பதன் மூலம், தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், தீயணைப்பு வீரர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்கவும் உதவலாம்.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋