Close
நவம்பர் 21, 2024 3:54 மணி

வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரமும் நானும்…

வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரமும் நானும்..

இந்த வருடம் பூப்புக்கும் போதே தாமதமாக வந்த பனிப்பொலி வினால், பெரும்பாலான பூக்கள் கொட்டி விட்டன. எஞ்சியவை யும் மிஞ்சியவையும் உயிர்ப்பிழைத்து பிஞ்சாகி கொண்டி ருக்கிற வேளையில், இலை சுருட்டு நோய் தாக்க ஆரம்பித்து விட்டது.

புழுக்கள் ஒன்று கூடி ஒரு மாநாடு போட்டு, இருக்கிற இலைகளை, தளிர்களை சுருட்டி கொண்டு உள்ளுக்குள் உட்கார்ந்து உண்டு திளைக்கின்றது. கூடவே ஆப்பிள் பிஞ்சுகளில் பூஞ்சை தாக்குதலால் மச்சம் வர ஆரம்பித்து விட்டது. புழு பூச்சிகள் தாவரங்களை தாக்கும் போது அவற்றை ஒழிக்க தெளிப்பான்களை உபயொக்கிக்க இருக்காமல் முடியவில்லை.

இயற்கை விவசாயம் என்பது தானும் உண்டு பிற உயிர்களை வாழ வைப்பது என்பது நிதர்சனம். நாம் எளிதாக இரசாயன மருந்துகளை பயன்படுத்தி விடலாம். நமக்கான காய் கனிகளை எந்த பூச்சிகளும் புழுக்களும், விலங்குகளும் உண்ணவிடாமல் செய்கிறோம் என்பது பொருள்.நமக்கு 90% பயிரிட்டவை விளைச்சலை கொடுத்து விடும்.

இதுவே இயற்கை முறைகள் மூலம் நமது அணுகுமுறை இருக்கும் போது பயிர்கள் சத்தாக விளைவிக்கப்படுவதோடு பூச்சிகள் புழுக்கள் மற்றும் விலங்குகள் தின்றது போக நமக்கு ஒரு 70% கிடைக்கலாம். நமக்கு பேராசையெல்லாம்இல்லை, பூத்ததில் காய்த்ததில் 50% கிடைத்தாலே போதும் என்கிற மன நிலையில் தான் நாம்.

இயற்கை விவசாயம் பற்றி நூறு வருடங்களுக்கு முன்னால் யாரும் பேசி இருக்க மாட்டார்கள். ஏன் என்றால், அப்போது எல்லாமே இயற்கை சார்ந்துதான் இருந்தது.

இரண்டு உலகப் போர்களுக்கு பின்னர், எதிரிகளைக் கொன்று குவிக்க மலை மலையாக தயாரித்து வைத்திருந்த அம்மோனியம் நைட்ரைட் உப்பை என்ன செய்வது என்று யோசித்த உலக தலைவர்களுக்கு அவற்றை நிலங்களில் உரமாக பயன்படுத்த முடியும் என்று தெரிய வந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உலகளாவிய விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. அறிவியல் தொழிற் நுட்பம்,விவசாய வளர்ச்சியில் அதன் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல.

கூடவே கட்டுபாடற்ற இரசாயன பூச்சிக் கொல்லிகளையும் விட்டு சென்றிருக்கிறது. பல முன்னேறிய நாடுகள் அவற்றின் பயன்பாட்டு உபயோகத்தை விழிப்புணர்வுடன் கட்டுப்பாட் டுக்குள் வைத்துக்கொண்டு அல்லது முற்றிலுமான தடையை விதித்து கொண்டு, தாங்கள் உற்பத்தி செய்வதில் கட்டுபாடு களை தளர்த்தி, உலகின் பல நாடுகளுக்கு இரசாயன மருந்துகளை ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கிற போங்காட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்த பூமிப்பந்து, வளி மண்டலம் அனைத்துமே 96 வகை கனிமங்களின் கூட்டல் கழித்தலே. ஒரு கலவை அமிர்தம்
ஆகலாம். மற்றொன்று விஷமாகலாம். ஒருவரின் அமிர்தம் மற்றவரின் விஷம் ஆகலாம்.

எது நன்மையானது என்பதை சரியான விஞ்ஞான ஆராய்ச்சி தான் முடிவு செய்கிறது. விஞ்ஞானம் சொல்வதை, ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நிலத்துக்கானதா என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒரு சொட்டு மருந்து இல்லாமல் ரசாயன உரம் இல்லாமல் இயற்கை உரங்களைக் கொண்டு மிக அழகாக பயிர் வளர்க்க நமக்கும் ஆசை தான். சொந்தமாக பயிரிட்டு
பராமரிக்கும் போது தான்.

பூச்சி புழுக்கள் கொடுக்கிற சவால்கள் சாதாரணமாக தெரிவதில்லை. நாம் இயற்கை விவசாயத்திற்கு எதிரான வர்கள் அல்ல. இங்கு கிடைக்கும்இயற்கை பூச்சி விரட்டி கரைசல்களான, வேப்ப எண்ணெய் கரைசலைக் கொண்டு மட்டுமே நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என்கிற எதிர்பார்ப்போடு, ஆப்பிள் அறுவடைக்காக காத்திருக் கிறேன்..,

எல்லாமே காலம் தொட்டுவிடும் தூரம்தான் காத்திருப்பது கையெட்டும் தூரம்தான் ! அப்போது …காலம் மாறும். ரசாயனமற்ற இயற்கை விவசாயத்திற்கு குறைந்த பட்சம் 50 விழுக்காடாவது திரும்புவோம்.காத்திருப்போம்.!

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top