வீட்டில் பூத்துக்குலுங்கும் மலர்களில் வண்டுகள் ரீங்கார மிட்டு வாழ்க்கை பாடத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன..
பூக்கள் வண்டுகளுக்கு அழைப்பு விடுத்ததா!
வண்டுகளாக வந்து பூக்கள் மீது அமர்ந்ததா!!
மலர்கள் வண்டுகளுக்கு அனுமதி கொடுத்ததா!
வண்டுகள் மலர்களிடம் அனுமதி பெற்றதா!!
இவையெல்லாவற்றிற்கும் ஒரே பதில்..இயற்கை அனுமதி வழங்குகிறது
மலர்கள் வண்டுகளுக்கு தேனை வழங்குகிறது அதற்குப் பிரதிபலனாக வண்டுகள் மலர்கள்கனியாக மாற மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.வண்டுகளும், மலர்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்க்கையை நடத்துகின்றன. ஒன்றில் இன்னொன்று தாங்கிய நிலையில் தான் வாழ்க்கை வட்டம் பின்னிக் கிடக்கின்றது!!
இந்த அழகிய மலர்களிடம் சுயநலம் இருப்பதில்லை. தான் தரும், தேன் உண்டு தான் வண்டுகள் வட்டமிடுகின்றன என எந்த மலரும் கர்வம் கொள்வதில்லை. மலர்கள் மலர்வது தனது சுயலாபத்திற்காக இல்லை என்றாலும் அவை ஒருபோதும் வண்டுகளை சுயநலவாதிகளாக பார்ப்பதில்லை.
பூப்பதும் பின்பு காய்ப்பதும் இந்த வண்டுகளால் தான். வண்டுகளை தம் மீது உட்கார மலர்கள் அனுமதிக்காவிட்டால், பூக்கள் கனியாவது ஸ்தம்பித்துவிடும் என்கிற சூட்சுமத்தை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. இதை உணர்கிற வண்டுகளும் அதை இறுமாப்பாக பார்ப்பதில்லை.
கொண்டும் கொடுப்பதும் தான் வாழ்க்கை..தருவதிலும் பெறுவதிலும் தான் இருக்கிறது வாழ்க்கை.இந்த எளிய தத்துவத்தை வண்டுகளும் (ஆண்களும்), மலர்களும் (பெண்களும்) உறவாடி நமக்கு வாழ்க்கைப் பாடத்தை உணரவைக்கிறது..,
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #