ஸ்ட்ராபெர்ரி பழச்செடி வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. பிரான்சில் மக்கள் வனப்பகுதியிலிருந்த ஸ்ட்ரா பெர்ரிகளை தோட்டத்திற்கு இடமாற்றம் செய்து பயிரிட்டது 1300 ஆம் ஆண்டு தான். 1700 களிலும் 1800 களின் முற்பகுதியில் இந்த பழம் இங்கிலாந்தில் பயிரிடப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தான் பல புதிய வகைகள் உருவாக்கப்பட்டன.
வெளிப்புறத்தில் விதைகளைக் கொண்ட ஒரே பழம் ஸ்ட்ராபெர்ரி. பொதுவாக பெர்ரி வகை பழங்களில் அதன் விதைகள் உள்ளே இருக்கும். விதைகள் வெளியில் இருப்ப தால், பிளாக்பெர்ரிகள், ப்ளூபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் அல்லது திராட்சைகள் போன்றுஉண்மையான பெர்ரி அல்ல இவை.
ஸ்ட்ரா பெர்ரியில் இருக்கும் ஒவ்வொரு விதையும் தாவரவிய லாளர்களால் தனித்தனி பழமாக கருதப்படுகிறது. சராசரி யாக ஸ்ட்ராபெரியில் 200 விதைகள் இருப்பதாக சொல்கிறார் கள்.
ஸ்ட்ராபெரி பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வளரக்கூடிய தாவரமாகும். ஒரு செடியை நட்டு வைத்தால், அது வருடா வருடம் திரும்ப வளரக்கூடியது. ஸ்ட்ராபெரி செடிகள் உடனடி யாக பலனைத் தராமல் போகலாம், ஆனால் ஒருமுறை விளைந்தால், அது சுமார் 5 வருடங்கள் விளைச்சலை தருகிறது.
வசந்த காலத்தில் பழுக்க கூடிய முதல் பழ வகை ஸ்ட்ராபெரி. வெள்ளை, ஊதா, மஞ்சள் மற்றும் சிவப்பு / இளஞ்சிவப்பு என ப்ல நிறங்களில் வரக்கூடிய பழமாகும். இந்த பழவகை செடியானது ரோஜா குடும்பத்தைச் சேர்ந்தது, கிட்டத்தட்ட 103 வகைகள் உள்ளன.
குறைவான கொழுப்பு, கலோரி, வைட்டமின் சி, நார்ச்சத்து,
ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் அதிகம் கொண்ட பழம் இவை. நாமெல்லாம் ஆரஞ்சு பழத்தில் தான் வைட்டமின் சி அதிகம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஸ்ட்ராபெர்ரியில் தான் வைட்டமின் சி அதிகம். ஸ்ட்ராபெர்ரியில் கொலஸ்ட்ரால் இல்லை. அறை வெப்ப நிலையில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரிகள், குளிர்சாதனத்தில் வைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளை விட இனிப்பானது.
பொதுவாக ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவதற்கு முன் கழுவினால் போதும், முன்னதாக கழுவி வைக்கும் போது, அது துரிதமாக கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பழங்களை கழுவும் போது, பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஸ்போர்கள் அகற்றப்பட்டாலும், அதிகப்படியான ஈரப்பதம், பாக்டீரியா அல்லது பூஞ்சை உருவாக அடித்தளம் அமைத்து கொடுத்து பழங்களை கெடுத்துவிடும். இது தான் இதற்கு பின்னால் இருக்கிற சிம்பிள் லாஜிக்.
ஏழு முதல் ஒன்பது வயதுடையவர்களில், சுமார் 53 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த பழம் தங்களுக்கு பிடித்தபழமாக தேர்வு செய்தாலும், சிலருக்கு ஸ்ட்ராபெர்ரி என்றாலே ஒருவித அச்சம், வெறுப்பு இருக்கிறது என்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது .
ஸ்ட்ராபெர்ரி குறித்த பயத்தை,ஃப்ரகரியாபோபியா (Fragariaphobia) என்கிறார்கள். ஸ்ட்ராபெரி ரோஜா குடும்பத்தின்
கீழே வருகிற ஃப்ரக்ரேரியா என்கிற பேரின வகையை சேர்ந்தது என்பதால் அதனுடன் போபியாவை சேர்த்து விட்டார்கள்.
நமக்கு இந்த பழத்தின் மீதான பாசமும் ஈர்ப்பும் அதிகமே தவிர பயமும் வெறுப்பும் இல்லை. உங்களுக்கு….,!!
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🍓 #