Close
நவம்பர் 22, 2024 2:38 காலை

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்(11.9.2023) 

அயலகத்தமிழர்கள்

இம்மானுவேல் சேகரன்

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்(11.9.2023)

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார்.1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிய வந்தது

இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்கு முறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். “ஒடுக்கப் பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். 1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிரூபித்தார்.

இம்மானுவேல் கிறிஸ்தவ ஆலயங்களால் தூண்டப்பட்டு இந்து தலித்துகள், கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர் என்கிற கருத்தும்..,

இந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த  செயல் என்கிற கருத்தும்.. இவையிரண்டு கற்பிதங்கள் தந்த தாக்கம் இன்று வரை அனலாய் தகிக்கிறது தமிழகத்தின் சில பகுதிகளில்..

பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். ஆதிக்க சாதியினரில் சிலர் தான் அதை விரும்பு வதில்லை. சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே என்பதை மறுக்க இயலாது என்பதை ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கத்தை தொடங்கிய இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top