Close
அக்டோபர் 5, 2024 7:21 மணி

சில புலனங்களில் தீபாவளி பண்டிகை மீது விமர்சனம்.. இங்கிலாந்திலிருந்து சங்கர்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

தீபாவளி வாழ்த்துகள்

சில புலனங்களில் தீபாவளி பண்டிகை மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இது வழமையான ஒன்று தான். பண்டிகைகளுக்கான காரண காரியங்கள் குறித்த அறிவுப் பூர்வமான ஆய்வுகளை தொடர்ந்தால், பண்பாட்டு தொன்மங் களுக்கு பங்கம் அளிப்பது போலாகிவிடும் என்பதால், அது குறித்த ஆழ்ந்த பார்வையை செலுத்தாமல், அது ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடி விட்டு போகலாம் என்பது தான் நம்மை போன்ற சராசரியான வர்களின் எண்ணம்.

புராதான வரலாற்று கதைகள் மீதான விவாதம், ஆன்மீக வாதிகளை காயப்படுத்திவிட கூடாது என்கிற அக்கறை தோய்ந்த கவனமிகுதியால், அது குறித்த பதிவுகளை தவிர்ப்பது,கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு நாம் தரும் மரியாதை.

இந்த குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் எல்லாவற்றை யும் விமர்சிக்க வேண்டும் என்கிற குறிப்பிட்ட சில குழுவினரின் சீர்திருத்த சிந்தனை நம்மை வியக்க வைக்கிறது..

பண்டிகை கொண்டாட்டத்தால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது என்று யோசிக்கையில், உற்சாகம் கொள்வதற்கான நாளாக, உறவுகளுடன் கழிக்கும் நாளாக தான், நாம் இனம் காண்கிறோம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத ஒரு தொன்மையுடன் இணைக்கின்றன. அறுப்படாத நீட்சியாக தொடர்கிறது. அதை தொடர்வதும், துண்டிப்பதும்.தனி நபர் சார்ந்த விஷயம்.அதை விட முக்கியம் பண்டிகைகள் குழந்தைகளுக்கான சந்தோஷத்தை தருகிற ஒன்று.

அதை அவரவர் பிள்ளைகளுக்கு தராமல் இருப்பது தான், பிரதான இலக்கெனில், கொண்டாடமல் விட்டுவிடுங்கள்.
கொண்டாடுபவர்களின் மனதை காயப்படுத்தாதீர்கள். நம்மில் தொடங்கி நம்மில் மட்டுமே முடிவதல்ல வாழ்க்கை..
இனிய தீபாவளி வாழ்த்துகள்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top