Close
ஜூலை 4, 2024 5:00 மணி

சிகை அலங்காரக் கலைஞர்கள் பற்றி சில குறிப்புகள்..

இங்கிலாந்து

சிகையலங்காரம்

சிகை அலங்காரக் கலைஞர்கள்  பற்றி சில குறிப்புகள்..

தங்களை மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் முடி திருத்துதலோடு, சித்த மருத்துவமும் அறிந்திருந்தனர். இந்த சமூகத்தினர் உயர் கல்வியில் பெரும்பாலும் சித்த மருத்துவத்தையே தேர்ந்து எடுக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன் எல்லாம் இரண்டு மூன்று ஊருக்கு ஒரு நாவிதர் இருப்பார். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஒரே வெட்டும் முறை தான்.

அப்போதெல்லாம் வீட்டிற்கும் வந்து வெட்டி விடுவார்கள். தலையை ஆட்டினால் தலையில் அடிப்பார்கள். கொஞ்சம் முடி விட்டு இப்படி அப்படி வெட்டுங்கள் என்று சொன்னாலும் அவர் வெட்டுவது தான் வெட்டு, அது தான் ஸ்டைலான கட்டு.

பெரும்பாலும் தங்களுக்கு மேலே உள்ள சமூகத்தினருக்கே மட்டுமே முடி திருத்தி விடுவார்கள். சமூகப் படி நிலைகளில் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றாலும், வசதியான நாவிதர்கள் ஊர்களில் மருத்துவ தொழிலும், சுப நிகழ்ச்சி களில் வாத்தியக் கலைஞர்களாய் பணியாற்று கின்றனர். இவர்கள் இசை வேளாளர்கள் என்கிற தெலுங்கர் இனத்தோ டும் சம்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

முன்பு போல் தற்போது இல்லை. இப்போது நாவிதர்கள் எல்லாம் பெரிய நிறுவனங்களில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் முடி திருத்தும் பணிக்கு வருவது குறைந்து விட்டது. முடி திருத்துபவர் தானே என்ற அலட்சியத்துடன் நம் மக்கள் செய்யும் அநியாயங்களும், அக்கிரமங்களும் கூட காரணமாக இருக்கலாம்.

அளவற்ற சகிப்பு தன்மை கொண்ட அவர்களும் மனிதர்கள் தான். நம் வீட்டில் கீழேயோ அல்லது உணவிலோ ஒரு முடி காணக்கிடைத்தால் காட்டுக்கூச்சல் போடும் நாம் அவர்களை நினைத்து பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தாய் மற்றும் தாரத்திற்கு அடுத்தபடியாக நாம் அழகாக இருக்க வேண்டும் என்று மெனக்கிடுபவர் சிகையாலங்கார கலைஞர் தான்.

முடி திருத்தும் தொழிலை இன்று மாற்று சமுகத்தவர்கள் கையிலெடுத்து நன்கு சம்பாதிக்கின்றனர். தற்போது அனைத்தும் வணிக மயமாகி விட்டது. இன்று முடி திருத்தும் தொழிலில் பல சமூகத்தினர் வந்து விட்டார்கள். முக்கியமாக பெண்கள் கூட வந்து விட்டார்கள்.

முன்பை போல் வீட்டின் கொல்லைப்புறத்தில் தரையில் அமர வைத்து முடி திருத்துவது கிடையாது. குளிர்சாதன வசதியுடன், காத்திருக்க பெரிய மெத்தை இருக்கைகள், பெரிய தொலைக் காட்சி, வாசிப்ப தற்கு ஆங்கில வார நாளிதழ்கள், புத்தகங்கள் என்று அதி நவீனமாகிவிட்டது.

கால மாற்றம் தான். ஒரு காலத்தில் வறுமையாக இருந்த தொழில் இன்று செழிப்பாக இருக்கிறது. இதற்கென்று இங்கிலாந்தில் கல்லூரிகளில் தனியாக பாடங்கள் இருக்கி றது. அதை முதன்மை பாடமாக எடுத்து படித்து பலர் சலூன் களில் வேலை செய்கிறார்கள்.

தனியாக கடை வைத்து விடுகிறார்கள். அங்கெல்லாம் சென்று அவர்கள் என்ன ஜாதி, மதம் என்றெல்லாம் கேட்பதில்லை. இந்த மாற்றம் நம்ம ஊரிலும் பெரு நகரங்களில் வந்துவிட்டது என்பது ஆரோக்கியமான அறிகுறி என்றால் மிகையில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில், கொரோனா தொற்று ஏற்பட்டதன் விளைவாக பொது முடக்கத்தால் சலூன் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடி திருத்திக்கொள்ள ஆரம்பித்தேன். என் இரு மகன்களும் இதற்கு பேருதவியாக இருந்தனர். அவர்கள் முடி வெட்டும் அழகும் நேர்த்தியும் பிடித்து போக இன்று வரை மகன்கள் தான் வெட்டி விடுகிறார்கள். தற்போது சலூன் பக்கம் செல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top