கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் உலக இட்லி தினத்தை 2015-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர்
“மல்லிப்பூ” இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கியவர்.
தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. சவுத் இந்தியன் ஃபுட் என்று வடநாட்டவர்கள் மனதில் இருப்பது இட்லியும் தோசையும்தான்.
ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம். உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது.இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க பிரபலமான உணவாக இருக்கிறது.
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு இட்லி தான்.சற்று முன் இட்லி சட்டினியுடன் சாப்பிட்டு இந்த பதிவை பகிர்கிறேன்.
#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#