கேன்டர்பரி நகரின் வெஸ்ட்கேட் கார்டனில் காணப்படும் “பேயபாப் ப்ளேன்” (Baobabs Planes) வகை மரம் குறித்த சில தகவல்கள்..,
குமிழ் வடிவில் தடித்து காணப்படும் தண்டுகள், இந்த மரத்தின் தனித்தன்மை எனலாம். எளிதில் இனம் காண இந்த சிறப்பியல்பு அம்சம் உதவுகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மரம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையானது.
இரண்டு உலக யுத்தங்களை கண்டுவிட்டு, இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இந்த மரங்கள் ஓரியண்டல் ப்ளேன் வகை மரங்களின் நகலியாக இருக்கலாம், கடந்தகாலத்தில்ஓரியண்டல் ப்ளேன் மரம் என்று தான்
அழைத்திருக்கின்றனர்.
பண்டைய பேயபாப் மரங்கள் குறித்ததோற்ற மூலத்தை, நவீன அறிவியல் தீர்த்து வைத்துள்ளது. டிஎன்ஏ ஆய்வுகளின்படி, 21 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு, மடகாஸ்கரில் இந்த மரங்கள் தோன்றின என்றும், அவற்றின் விதைகள் பின்னர் கடல் நீரோட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும்
ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, தனித்தனி இனங்களாக பரிணமித்தன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விக்டோரியன் தாவரவியலாளரும் இயற்கை வடிவமைப்பாளருமான
வில்லியம் மாஸ்டர்ஸ் என்பவரால் 1820 ஆம் ஆண்டில் இம்மரங்கள் நடப்பட்டன. நகரத்தில் மொத்தம் ஐந்து மரங்கள் கீழ் கண்ட இடங்களில் இன்றும் இருக்கிறது.
1) கேன்டர்பரி கோட்டை
2) வெஸ்ட்கேட் கார்டன்ஸ் (காணொளி இணைப்பில்)
3) பீர் கார்ட் லேன் (பொதுமக்களுக்கு அணுகமுடியாதது, ஆனால் சாலையில் இருந்து பார்க்கமுடியும்)
4) பழைய டோவர் சாலை மற்றும்
5) கேன்டர்பரி கதீட்ரல்
என்றாவது ஒருநாள் இந்த நகரத்திற்கு செல்கிற போது, தவறாமல் பேயபாப் மரத்தை தொட்டுப்பார்த்து, ஒருமுறை சுற்றிப்பார்த்து விட்டு வாருங்கள். நினைத்த காரியம் கைக்கூடும்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#