Close
செப்டம்பர் 24, 2024 6:22 காலை

பண்பாடு சிறக்க, மனித வளம் பெருக, மனம் குளிர வைப்பது தான் இலக்கியம்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பவா செல்லத்துரையுடன் உரையாடல்

இங்கிலாந்தின் ரக்பி நகரத்தில் பவா செல்லத்துரையுடன் உரையும், சந்திப்பும், தாய்த்தமிழ் சங்கத்தால் (14.09.2024) ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுவாக தமிழ் இலக்கிய கூட்டங்கள் பல அதிக முயற்சிகள் அல்லது கச்சிதத்திற்கான முனைப்பு இல்லாமல் ஒருங்கிணைக்கப்படுபவை. பேசுபவர் கேட்பவர் இருவரும் ஆர்வமில்லாமல் இருப்பதையே புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட கூட்டங்களில் பார்க்க முடியும். மேலும் 40 வயதுக்கு குறைவானவர்களை இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து காண்பது அபூர்வம். ஒருவகையான சோம்பலே இலக்கியக் கூட்டங்களில் நிலவும். ஆனால் இந்த இலக்கிய கூடுகைநேர்த்தியான முறையில் ஒருங்கிணைக் கப்பட்டு, இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து திட்டமிடப்பட்டு கச்சிதமாக நிகழ்த்தப்பட்டது.

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் வாசிப்பு என்பது வெகுவாக குறைந்து விட்டது. நம்மில் பலர் வலைதளங்களில் வாசிக்கிறோம் என்றாலும் புதிதாக அச்சடித்த புத்தகத்தை வாங்கி அதன் வாசனையை நுகர்ந்து, அந்த புத்தகத்தை வாசிப்பது என்பது அலாதியான அனுபவம். அதைவிடச் சிறந்தது நாம் வாசித்த அந்த புத்தகத்தைப் பற்றி மற்றவர் களிடம் கலந்துரையாடுவது.
வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் படைப்பாளிகளையும், படைப்புகளையும் ஊக்குவிக்கும் விதமாகமாகவும் கதை சொல்லல் என்கிற நிகழ்வின் மூலம் பவா செல்லத்துரை ள், தமிழ் இலக்கிய வாசக பெருமக்களை தன் பக்கம் இழுத்து, ஒரு பேரியக்கத்தை சத்தமில்லாமல் கட்டமைத்தி ருக்கிறார் என்பதை, இன்றைய அரங்கத்தில் பார்வையா ளர்கள் எழுப்பிய கேள்விகளும், பவாவுடன் நடத்திய உரையாடலும் ஊர்ஜிதப்படுத்தியது.

மொத்தத்தில் இலக்கியம் ஒரு பெரிய பண்பாட்டு இயக்கமாக இங்கிலாந்தில் வேரூன்ற வேண்டும் என்பதற்காக தோழர் பௌஷர் எடுக்கிற இந்த முயற்சிகளின் பிரதான நோக்கம் பரந்து விரிந்து பல நகரங்களில் மெல்ல மெல்ல மிளிர தொடங்கி விட்டது.

பண்பாடு சிறக்க, மனித வளம் பெருக, மனம் குளிர வைப்பது தான் இலக்கியம். அந்த வகையில் நேற்றைய நிகழ்வு, பவா உட்பட அனைவரையும் நிறைவாக உணர வைத்தது என்பதே உண்மை.

# இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top