Close
நவம்பர் 1, 2024 6:21 மணி

போராளிகளின் முன்னோடி சே குவேரா… நினைவலைகள்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

சேகுவேரா நினைவு தினம்

சே குவேரா பற்றி அமெரிக்க சார்பு ஊடகங்களில் இரண்டு விதமான பொய்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது உண்டு. ஃபிடல் காஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான் கியூபாவிலிலிருந்து ரகசியமாக வெளியேறி சே குவேரா பொலிவியாவில் கெரில்லா யுத்தத்தைத் துவக்கினார் என்பது ஒரு பொய்.(அவதூறு1)

பொலிவியாவில் சே குவேராவின்கெரில்லாக் குழுவின் ஒரே பெண் போராளியான தான்யா, ஒரே சமயத்தில் கியூபாவின் உளவாளியாகவும் சோவியத் மற்றும் கிழக்கு ஜெர்மன் உளவாளியாகவும் இருந்து சே குவேராவைக் காட்டிக் கொடுத்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என்பது இன்னொரு பொய்..,(அவதூறு 2)

கம்யூனிச நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமான முரண்பாடு உச்சத்திலிருந்த தொண்ணூறுகள் வரையிலான, உலகில் நிலவிய அரசியல் காரணங்களால் இந்த ஆதாரமற்றகுற்றச்சாட்டுகளின் பின் பல்வேறு போராளிகளின் வாழ்வும் கியூப அரசுசார்ந்த உலக கெரில்லா யுத்த அரசியல் ரகசியங்களும் இருந்ததால் இந்த அவதூறுகளுக்கு எல்லாம் கியூப அரசினால் அவ்வப்போது பதில்கள் தருவது சாத்தியமில்லாமல் இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் பல நூல்கள், துண்டறிக்கைகள், கட்டுரைகள், உண்மையை உடைத்தும், உண்மைக்கு புறம்பானவையை உடைத்தும், செய்திகள் வெளிவந்த வண்ணமிருந்தது.  1997 -ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் லீ ஆன்டர்ஸன் எழுதிய இந்த புத்தகம், சே குவேராவின் வாழ்க்கை வரலாறு மற்றும் யுத்தம் குறித்த முழு உண்மைகளையும் உலகுக்கு முன்வைத்தது.

இதில், ஆண்டர்ஸன் chips off the tarnish of mythology to prevent an evenhanded and reliable account of life of one of the most iconic figures of the 20th century.எனது வீடு என்பது எனது இரு கால்கள்’’ என்று பயணத்தின் மேல் தீராக் காதல் கொண்ட, உலகையே சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளுக்கான முன்னோடியாக, பயணம் செய்யும் இடத்தின் மண்ணையும் மக்களையும் நேசித்த, தன்னுடைய பயணங்களில் இருந்தே ஒரு போராளியாக உருவெடுத்த சே என அன்போடு அழைக்கப்பட்ட சேகுவேராவை வாசிக்க, இந்த புத்தகத்தை பரிந்துரைப்பேன்..வாசியுங்கள், வாய்க்கும் போது..,

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top