Close
நவம்பர் 22, 2024 12:02 காலை

ஆலங்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த வீடு இடிப்பு: சிபிஎம் கட்சி கண்டனம்

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே இடிக்கப்பட்ட வீடு

ஆலங்குடி அருகே தச்சன்கோரப்பத்தையில் 60 ஆண்டுகளாக  குடியிருந்துவந்த வீட்டை இடித்த வருவாயத்துறையினருக்கு சிபிஎம்  கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 50 ஆண்டுகளுக் கும் மேலாக புறம்போக்கில் குடியிருந்துவரும் வீட்டை இடித்துத்தள்ளிய  வருவாய்த்துறையினரின் செயலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவல்குடி ஊராட்சிக்கு உட்பட்டது தச்சன்கோரப்பத்தை கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் பி.செல்வராஜ்,  இங்குள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்.

இந்த இடம் அரசின் வேறு எந்த பயன்பாட்டுக்கோ, போக்குவரத்துக்கோ தேவைப்படாத இடம். இந்நிலையில், சில தனிநபர் விரோதம் காரணமாக மேற்படி இடத்தை இடிக்க வேண்டுமென கொடுத்த புகாரின் அடிப்படையில் வருவாயத்துறையினர் இடிப்பதாக அறிவித்தனர்.

மேற்படி இடத்தை இடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. எனவே, மேற்படி இடத்தை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. வீட்டுக்கு சொந்தக்காரரான செல்வராஜூம் அதிகாரிகளிடம் மனுக்கொடுத்துள்ளனர். குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டும் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி வீட்டை இடிப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லாமல் வட்டாட்சியர் செந்தில்நாயகி தலைமையில் மேற்படி செல்வராஜின் வீட்டை திங்கள்கிழமை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசீலா, வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல், ஒன்றியத் தலைவர் பி.கனகராஜ், செயலாளர் ஏ.சரவணன், பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர் வீட்டை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும் மேற்படி சம்பவம் நடந்துள்ளது.

சிபிஎம் கண்டனம்: இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியது: அரசுப் புறம்போக்கில் குடியிருந்துவரும் ஏழைகளுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பொதுவாக நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வருபவர் களுக்கு பட்டா வழங்குவதில் வருவாய்த்துறையினருக்கு பிரச்னை இருக்காது.

வேறு வகையான புறம்போக்கில் குடியிருந்து வரும் ஏழை களுக்கு வகை மாற்றம் செய்து செய்து பட்டா வழங்க வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை. அப்படி பல இடங்களிலும் வகைமாற்றம் செய்து பட்டா வழங்கப்பட் டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நத்தம் புறம்போக்கில் ஏராளமான ஏழைகள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வரும் வீடுகளை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறையினர் இடித்துவருகின்றனர்.

சமீபத்தில் கறம்பக்குடி தாலுகா நம்பன்பட்டி கிராமத்தில் இந்து என்பவரது வீட்டை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதே போல, இன்று (ஆக.29) தச்சன்கோரப்பத்தை கிராமத்திலும் எங்கள் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி வருவாய்த்துறை யினர் இடித்துள்ளனர்.

வருவாய்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீதிமன்ற உத்தரவைக் காட்டி வீட்டை இடிப்பதற்கு முன்வந்தபோது கூட எங்கள் கட்சியின் போராட்டத்தினால் பல இடங்களில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

ஆனால், புதுக்கோட்டை மாவட்ட வருவாயத்துறையினர் எந்தவிதமான நியாயமும் இல்லாமல் நத்தம் புறம்போக்கில் ஆண்டாண்டுகாலமாக குடியிருந்துவரும் வீட்டை இடத்துள் ளனர். இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இது தமிழக அரசிற்கு அவப்பெயரை உண்டாக்கும் செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

மேற்படி தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட அளவிலான போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top