Close
ஏப்ரல் 5, 2025 11:51 காலை

புதுக்கோட்டை பாஜக அரசு தொடர்பு பிரிவினர் திமுக எம்பிக்கு எதிராக நூதனப் போராட்டம்

புதுக்கோட்டை

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

அனைத்து ஜாதியினர் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசி தமிழ்நாட்டில் மதக்கலவரம்  ஜாதி சண்டைகள் உருவாக்க முயற்சி செய்து வரும் திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து  புதுக்கோட்டை பாஜக அரசு தொடர்பு பிரிவினர் நூதன போராட்டம் நடத்தினர்.

இந்து மக்களை பேசும் ஆ.ராசா, வெண்டிக்காய் சாப்பிட்டு மூளையை வளர்க்கவும் மற்றும் அனைத்து ஜாதியினர் பெரியவர்களை மரியாதை இல்லாமல்  புத்தி பேதலித்து விட்டதை போல பேசுவதால் எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில்  புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, வெண்டைக்காய், எலுமிச்சம்பழம் ஆகிய பொருள்களை  (Speed Post) ஸ்பீடு போஸ்ட் மூலம்  பெரம்பலூர் வீட்டிற்கும் சென்னை வீட்டிற்கும், டெல்லி வீட்டிற்கும்   அனுப்பி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top