Close
ஏப்ரல் 4, 2025 12:19 காலை

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர்களாக அமைச்சர் ரகுபதி- செல்லப்பாண்டியன் நியமனம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தெற்கு- வடக்கு மாவட்டச்செயலர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ரகுபதி, வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார், அரசு வழக்குரைஞர் செந்தில்குமார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும், வடக்கு மாவட்டத்திற்கு செயலாளராக கே.கே.செல்லப்பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துகளை .தெரிவித்தார்

இதேபோல் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, துணை செயலாளராக (பொது) கருப்பையா, துணை செயலாளராக (ஆதிதிராவிடர்) மதியழகன், துணை செயலாளர் (மகளிர்) ராஜேஸ்வரி,  மாவட்டப் பொருளாளர் லியாகத் அலி.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப.சரவணன், கீரை.தமிழ்ராஜா, சண்முகம். பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், சாத்தையா,  வழக்கறிஞர் செந்தில்குமார், செல்லத்துரை, எட்வர்ட் சந்தோசநாதன், சி.ஆர்.வி.சித்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு மாவட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் (பொது) ஞான.இளங்கோவன், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) அடைக்கலம், துணைச் செயலாளர் (மகளிர்) ஸ்ரீதேவி, பொருளாளர் அபுதாஹீர்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கலைமணி, ஜெயராமன், ஆனந்த். பொதுக்குழு உறுப்பினர்கள் மணிராஜன், சீனி.பழனியப்பன், வீரையா, செல்வம், சுப்பிரமணியன், கலைவாணி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top