Close
நவம்பர் 22, 2024 7:40 காலை

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாள்: பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி

புதுக்கோட்டை

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாளில்

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான வடகாட்டில் உள்ள  அவருடைய நினைவிடத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சமுதாயப் பிரநிதிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் அ, வெங்கடாஜலம் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் பியுசி படித்தார். 1984, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டார். 1984 -ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 ல் வரை தனிப்பாதை வகுத்து சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டார்.

1996 -ல் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும் சுயேச்சையாக களமிரங்கி கட்சித்தலைமை வியக்கும் வகையில் வெற்றிக்கனியைப் பறித்தார்.

இவர் ஆலங்குடி தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அக்டோபர் 7, 2010 அன்று முகம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜதுரை, ராஜபாண்டி, ராஜராஜன்,பவளக்கொடி, சுமதி ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

புதுக்கோட்டை
முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த திரண்ட இளைஞர்கள்

வடகாட்டில் நடைபெற்ற நினைவஞ்சலி  நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், நிர்வாகிகள் க. பாஸ்கர், வி.சி. ராமையா, கூகூர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைப் போல, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி  மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top