பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் உள்ள நேசக்கரம் முதியோர் இல்லத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு காலை உணவு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கருப்பையா, குன்றண்டார் கோவில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.