Close
நவம்பர் 22, 2024 7:31 காலை

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டாஸ்மாக் நிர்வாகத்தைக் கண்டித்து பிச்சைப்பாத்திரம் வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சீனிவாசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிச்சை பாத்திரத்தை தலையில் சுமந்தவாறு கோஷங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையில் பிச்சை பாத்திரம் வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

தமிழக மக்களை புதுக்கோட்டை உழைப்பாளிகளை மதுப் பிரியர்களாக மாற்றி வியாபாரம் செய்யும் தமிழக அரசு இதைவிட அரசு மதுபான கடைகளில் அரசு நிர்ணயத்தை விலையை விட 15 ரூபாய்க்கு கூடுதலாக யாருக்காக இந்த பணம் பெறப்படுகிறது ஒரு மாதத்திற்கு புதுக்கோட்டை மட்டும் 1.90 கோடி ரூபாய்  கிடைக்கிறது.

ஒரு மாவட்டத்துக்கே இவ்வளவு உபரித்தொகை கிடைக்கிறது என்றால் மீதமுள்ள 37  மாவட்டங்களிலும் ஒரு மாதத்திற்கு எத்தனை கோடிகள் கிடைக்கும்.

இந்துக்கள் பண்டிகை நாளான தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பு அக். 21, 22, 23 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முற்றுகை போராட்டம் மற்றும் பிச்சைப்பாத்திரம் வைக்கும் போராட்டம் நடைபெறும் மாவட்ட பாஜக அரசு தொடர்புப் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் கட்டமாக திங்கள்கிழமை (10.10.2022) புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து  ஊர்வலமாகச் சென்று எதிரே சாந்தநாதபுரம் நான்காம் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில்  பிச்சை பாத்திரம் வைக்கும்  போராட்டம் நடைபெற்றது.

பாஜக  விவசாய பிரிவு  மாவட்ட பொதுச்செயலாளர் மயில் சுதாகர், அரசு தொடர்பறிவு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அரசு தொடர்பறிவுப்பிரிவு நகர தலைவர் வடிவேல் மற்றும் அரசு தொடர்பு நிர்வாகிகள் விவசாய அணி நிர்வாகி செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த நகர காவல்நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீசார் அங்கு சென்று  டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்ட பாத்திரத்தை கைப்பற்றி அனைவரையும் வேனில் ஏற்றி   புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top