Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மூவாயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் பங்கேற்றோர்

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 3,000 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அரங்கேற்றி வருகிறது. அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில், பிஜேபி செயல்பாடுகள் மற்றும் ஆர் எஸ் எஸ் பின்பலத்தின் காரணமாக அமைதியின்மை சூழ்ந்துள்ளது. சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சிகளும், கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு முதல்வர் நச்சு அரசியலுக்கு இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அமைதி பூங்காவாக செயல்பட உரிய நடவடிக்கையை அரசு தரப்பில் எடுக்கப்படும் என்றும், ஆர் எஸ் எஸ், சங்பரிவார் கும்பல்களுடைய வன்முறை, வெறுப்பு அரசியலுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்,முறியடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாட்டில் ஐம்பது இடங்களில் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொது அமைதிக்கு ஆர்எஸ்எஸ் பேரணியால் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சூழ்ந்து வரும் காவிய மய அபாயத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தமிழ் நாட்டில் அமைதியை நிலைநாட்ட மனித சங்கிலி போராட்டத்திற்கு விடுத்திருந்த அழைப்பினை ஏற்று  செவ்வாய்க்கிழமை (11.10.2022)  தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில்  மாலை 4 மணிக்கு ஆற்றுப்பாலத்திலிருந்து ரயிலடி வரையிலும், வடக்கு பகுதியில் பழைய பேருந்து நிலையம் வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி ஆகியோர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் அண்ணாதுரை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன்,சிபிஐ (எம்எல்) மாவட்ட நிர்வாகி கே.ராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அயனாபுரம் சி.முருகேசன் , சமவெளி விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனி ராஜன்.

தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஐ.எம். பாதுஷா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ.அப்துல்லா, எஸ்டிபிஐ தொகுதி செயலாளர் முகமது ரபிக், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணை செயலாளர் ராவணன்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகி சூசைபால், அறநெறி மக்கள் கட்சி நிர்வாகி சார்லஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி நிர்வாகி ஆரோக்கியசாமி மற்றும் அனைத்து கட்சிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் உள்பட சுமார் 3 ஆயிரம்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top