Close
நவம்பர் 22, 2024 2:57 மணி

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 157 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி கற்றலை தொடர்ந்திடும் வகையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 105 மாணவர்களுக்கும் மற்றும் 52 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 157 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மறக்கமுடியாத இடமாக தங்கள் கல்வி பயின்ற பள்ளி, கல்லூரி இயங்கி வரும். அந்த வகையில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாகிய நான் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் போல சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு மாணவ பருவத்திலேயே தங்களுக் குண்டான குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

 உடல் ஆரோக்கியத்திற்கு கல்வியுடன் சேர்ந்து விளையாட்டி லும் ஆர்வம் செலுத்த வேண்டும். இதன்மூலம் கல்வியுடன் நல்ஒழுக்கத்தையும் வளர்த்து இச்சமுதாயத்திற்கு மனித நேயமிக்க மாணவனாக விளங்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top