Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

எடப்பாடி பழனிசாமி கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட் டதை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினர் புதன்கிழமை(19.10.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் சி. விஜயபாஸ்கர், டி. ஜெயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து புதுக்கோட்டையில்  தெற்கு நகரச்செயலர் எஸ்.ஏ.எஸ். சேட் (எ) அப்துல்ரகுமான் தலைமையில் அதிமுகவினர்  புதிய பேருந்நு நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் , நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், பாரத், மாவட்ட வர்த்தகர் அணி துணைத்தலைவர் அப்பு (எ) கனகசபை, தலைமைக்கழக பேச்சாளர் போஸ் (எ) அருணாச்சலம், கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.ஆர்.எஸ். ஆனந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், குமார், பழக்கடை சேகர், ஒன்றிய செயலர் ராம்குமார், இக்பால், மாவட்ட மீனவரணி தலைவர் சுந்தரமூர்த்தி.

அறங்காவல்குழுத்தலைவர் பழனிவேல், முன்னாள் விஏஓ சிவகுமார், மாவட்ட மகளிரணி இணைச்செயலர் இன்பவள்ளி, பேபி ராணி, சின்னாத்தாள், எஸ்.ஆர்.டி. சேகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top