ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதரை, ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார்.
தனது இருக்கையில் இருந்து இறங்கி வந்து முதல் வரிசையில் உள்ள அவரிடம் ஆளும் கட்சி உறுப்பினர் போல் நடந்து கொள்ளுங்கள் தேவையின்றி பேச வேண்டாம் என்றார்.
ஆதி ஸ்ரீதர் தனது வார்டில் கடந்த ஆறு மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை, தொடர்ந்து பலமுறை மனுக்கள் அளித்தும் எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது, மற்றவர்களை பணிகள் நடக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்பும் இல்லை,
பல்வேறு குறைபாடுகளை சுட்டி காட்டிய போதும் மாநகராட்சி கூட்டத்தில் பதில் இல்லை என்று கடுமையாக சாடினார். அப்போது மேயர், யாரோ தூண்டிவிட்டு நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று குறிப்பிட்டார்.
துணை மேயர் செல்வராஜ் : சிலருடன் சேர்ந்து கொண்டு கவுன்சிலர் எனக்கு எதிராகவே தேவையின்றி புகார் செய்தார். அவரது வார்டில் பள்ளி சுவர் ஒன்று இடிந்தது கூட நான் சென்று சரி செய்தேன் என்று குறிப்பிடார்.
இதைதொடர்ந்து மேயர், துணை மேயர், கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேயர் தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி வந்து உறுப்பினர் இருக்கும் இடம் சென்று கடுமையாக அவரை எச்சரித்தார். பிறகு மற்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்து அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது