Close
நவம்பர் 22, 2024 5:28 மணி

அறைக்குள் பேசும் விஷயங்கள் அம்பலத்துக்கு வருகின்றன… கட்சி நிர்வாகிகள் மீது மாவட்ட திமுக செயலர் எரிச்சல்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற திமுக ஆலோசனைக்கூட்டம்

கோபி குள்ளம்பாளையத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் எரிச்சலுடன் பேசியதால்  கட்சித் தொண்டர்களி டையே  அதிர்ச்சியை   ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பேசியதாவது: கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளில் சிலர் , இங்கு நடக்கும் நிகழ்வுகளை  வாட்ஸ் ஆப் மூலம் பொது வெளியில் பரப்பி வருகின்றனர்.

அதனால் தான், முக்கிய நிர்வாகிகளை மட்டும் இங்கு வர சொல்லி இருக்கிறேன். இங்கு நடப்பவைகளை வாட்ஸ் ஆப்பில் எடுத்து யார் அனுப்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.  கட்சித் தலைமையிடம்  சொல்லி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கும் வகையில்  பேசினார்.

வாட்ஸ் ஆப் பில் யார் அனுப்புகிறார்கள் எனத்தெரியும்  என்கிற போது,  அவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசாமல், கூட்டத்தில் இவ்வாறு மிரட்டும் தொனியில்  பேசியது அங்கு வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இது குறித்து திமுக. நிர்வாகிகள் கூறுகையில், யார் சொல்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அனைவரையும் மிரட்டும் வகையில் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசுகிறார். கூட்டத்துக்குள் யாரும் செல்போன் எடுத்து செல்ல கூடாது என்பதை உணர்த்துவது போல்  உள்ளது.

மேலும், கூட்டத்துக்கு கட்சி தொண்டர்கள் வந்ததால் கட்சி வளரும், அதை தவிர்த்து யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு, தொண்டர்களை புறக்கணிக்கும் முடிவு  கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல  என்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம்  தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர  முதல்வர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இரண்டு மாதங்களில்ல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அப்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்ற முடியும். வரும் 2024 -ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றிப்பெற வைக்கவேண்டும்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி.எம். பி.வரும்.13 -ஆம் தேதி ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.  கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் நல்லசிவம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top