Close
நவம்பர் 22, 2024 6:29 காலை

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு திருநெல்வேலியில் தொடக்கம்…

தமிழ்நாடு

திருநெல்வேலியில் தொடங்கிய ஏஐடியூசி மாநில மாநாடு

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு  (1.12.2022) இன்று திருநெல்வேலியில்  உற்சாக ஆர்ப்பரிப்புடன்  தொடங்கியது.

சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ உ சி உள்ளிட்ட தியாகம் நிறைந்த போராட்டகளமான திருநெல்வேலியில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏ ஐ டி யூ சி தொழிற்சங்கத்தின் 20 -ஆவது மாநில மாநாடு (டிச1)  வியாழக்கிழமை துவங்கியது.

ஏஐடியூசி தொழிற்சங்கம் இந்தியாவில் முதன் முதலாக துவக்கப்பட்ட மத்திய தொழிற்சங்க அமைப்பாகும். தற்பொழுது 103 -ஆவது ஆண்டாக உழைக்கும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும், சுரண்டலற்ற சோசலிச அரசை நிறுவிடவும் தன்னலமற்று போராடி வருகிறது.

ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ,சிங்காரவேலர், வஉசி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இந்த சங்கத்தை தலைமையேற்று வழிநடத்தி, தொழிலாளர்களை சுதந்திரப் போராட்டத்தில் ஒன்றிணைத்து போராடினார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகும் நாட்டு நலன், தொழிலாளர் நலன் என்ற கொள்கைகளை முன் வைத்து ஏஐடியூசி செயலாற்றி வருகிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளையும், நாட்டையும்,மக்களையும் பிளவுபடுத்தும் கார்ப்பரேட் பாசிச  கொள்கைகளை எதிர்த்து போராட, அனைத்து தொழிற் சங்கங்களையும், தொழிலாளர் களையும் ஒன்றிணைத்து வலுமிக்க போராட்டத்தை ஏஐடியூசி நடத்தி வருகிறது.

இந்திய நாட்டின் சொத்துக்கள் விலை பேசி விற்கப்படு கின்றது. தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகள் உருவாக்கப் பட்டு, கோடியாய் கொள்ளையடிக்க வழி வகுக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் தாய் மொழிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, இந்தி ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது.

புதிய கல்வி கொள்கை, நீட் உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் ரத்து செய்வது, அரசு மற்றும் தனியார் துறைகளில் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கட்டுமானம் உள்ளிட்டு அனைத்து தொழில் வேலைகளில் அதிகரித்து வரும் வட மாநில தொழிலாளர்களை கட்டுப்படுத் துவது, சிறு குறு தொழில்களை, பட்டு, கைத்தறி உள்ளிட்ட கைத்தொழில்களை பாதுகாப்பது.

மக்களுக்கு சேவைசெய்து வரும் பொதுத்துறைகளில், இந்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கை, கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல் நல உதவிகளை மற்ற நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கும் வழங்குவது, தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது.

தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழகம், டாஸ்மாக், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர், பணியாளர் கள் பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை மாநாட்டில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

டிச. 1 -இல்  தொடங்கிய முதல் நாள் மாநில மாநாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஏஐடியூசி தலைவருமான கே. சுப்பராயன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு
மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகள்

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி .கணேசன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநாட்டின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி  முன் வைத்து பேசினார். இன்று மாலை மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை ஒன்றுபட்டு எதிர்கொள்வோம் என்ற கருத்தரங்கில் ஏஐடியூசி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் , தொமுச பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர். மு.சண்முகம்,.

ஹெச் எம் எஸ் அகில இந்திய தலைவர் க.அ.ராஜா ஸ்ரீதர், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் டி.வி.சேவியர் , ஏ ஐ யூ டி யூ சி தலைவர் அ.அனவரதன், ஏஐசிசிடியூ பொதுச்செயலாளர் க.ஞான தேசிகன், டபிள்யூபிடி யூசி துணைத்தலைவர் ஆர். சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து டிச.2 (நாளை) நடைபெறும் மாநாட்டில் உலக தொழிலாளர் சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் , அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் இ.அருணாச்சலம், பி எஸ் என் எல் தொழிற்சங்கத்தின் தலைவர் கே.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கேரள அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் சிறப்புரையாற்றுகிறார். உலகத் தொழிலாளர் சம்மேளனத் தின் நிதிக் குழு தலைவர் சி .எச் .வெங்கடாசலம் மாநாட்டை நிறைவு செய்து பேசுகிறார். டிசம்பர் 3 -ஆம் தேதி நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top