Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் நடவடிக்கை: முதல்வர் தலையிட வலியுறுத்தல்

தஞ்சாவூர்

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன்

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் பிரச்னையில். தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென உலகத்தமிழர் பேரமைப்பு வலியுறுத்தல்.

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் வெளியிட்ட அறிக்கை:  கேரள மாநிலத்தில் மூணாறு, பீர்மேடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு கேரள எல்லைகள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான பீர்மேடு, மூணாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. வலுவான போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் இணைக்கப் படவில்லை.

இருந்தாலும் கேரள மாநிலத்தை தங்கள் மாநிலம் போல் நேசித்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மூணாறில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற இடங்களில் உள்ள வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கேரள அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வீடுகளை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் மூணாறில் தமிழர்களுடன் அதே இடத்தில் வாழ்ந்து வரும் கேரளா மாநிலத்தவர்களுக்கு வீடுகள் ஆக்கிரமிப்பு என்று அறிவித்து அவர்களை வெளியேற்றும் நோட்டீஸ் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கேரளா மாநிலத் தவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதி என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.

மூணாறு பகுதி வாழ் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற் றும் நடவடிக்கை குறித்து உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு கேரளா முதலமைச்சருடன் பேசி தீர்வு காண வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மூணாறு பகுதி வாழ் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றக் கூடாது என்று உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அயனாபுரம் சி. முருகேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top