Close
நவம்பர் 22, 2024 12:14 மணி

பொங்கல் தொகுப்பு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை

மதுரை காஞ்சி பெரியவர் கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல்  வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பைப் போல் இல்லாமல் இந்த ஆண்டிலா வது மக்கள் பயன்படுத்தும் வகையில் பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும் என்றார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள, காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவில், குருவார தின சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தனது மகள் உட்பட 51 ஏழை எளிய மணமக்களுக்கான திருமண விழா அழைப்பிதழை வைத்து சுவாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை  அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் .பி. உதயகுமார் மற்றும் அவரது மகள் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பாரதி யுகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உடன் இருந்தார்.

பின்னர் ஆர் .பி .உதயகுமார் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
பொங்கல் திருநாளில் முதல் முதலில் 100 ரூபாய் பொங்கல் பரிசினை அம்மா வழங்கினார்கள். அதனைைத்தொடர்ந்து ,அம்மாவின் வழியில்  முன்னாள் முதல்வர் பழனிசாமி  ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுவழங்கினார்.

2021 ஆம் ஆண்டு அரிசி, சர்க்கரை, உலர் திராட்சை முந்திரி ஏலக்காய் ஒரு மூழு நீளக்கரும்பு இத்துடன் இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் கொடுக்காத வகையில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகையை, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் இந்துவா, கிறிஸ்துவர்களா, இஸ்லாமியர்களா என்பது அல்லாமல் குடும்ப அட்டை வைத்திருக்கிற 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கினார்.

ஆனால் ,திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று இந்த 19 மாத காலத்திலே, நாம் ஒரு பொங்கலை நாம் கடந்து வந்திருக்கிறோம்.அந்த பொங்கல் எப்படி நம் கடந்து வந்தோம் என்பதை இந்த நேரத்திலே நினைவு கூற வேண்டியது இருக்கிறது.

ஏனென்றால், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலேயே பொங்கல்பரிசு இல்லை, வேட்டி,சேலைகள் இலவசமாக கொடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக, கூட்டுறவுத் துறை ,வேளாண் துறை செயலாளர் கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை நாம் இன்றைக்கு ஒரு முக்கிய அரசின் கவனத்தை நாம் ஈர்க்க வேண்டிய விஷயமாக  அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் 2017 -ஆம் ஆண்டு முதல் இந்த பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு, அதை ஒரு முழு வடிவத்தோடு மக்களிடத்திலே சேர்த்தவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஆண்டு குடும்ப அட்டைகளுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளில் அரிசி, வெல்லம்,முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்ட 20 வகையான பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து பெரும்பாலும் வாங்கப் பட்டது.

இந்த பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவில் இல்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சுட்டி காட்டினார்.
பல மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எதிர் கட்சி தலைவர் எப்பாடியார் சுட்டிக் காட்டியதற்கு பிறகு, அது பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத நிலையில் இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக ஊடகங்களிலே வெளி வந்தது.

பொங்கல் பரிசு தொகை என்பது வெறும் பரிசுத் தொகுப்பு அல்ல, அதில் உணர்வுகள் இருக்கிறது. நம்முடைய பந்தம் இருக்கிறது.  நம்முடைய பாசம் இருக்கிறது. நம்முடைய அன்பு இருக்கிறது. .அரசு மக்கள் மீது செலுத்துகிற அக்கறைனுடைய அடையாளமாக தான்  அதிமுக வழங்கி வந்தது.

கடந்த பொங்கலுக்கு வழங்கப்பட்ட வெல்லம் கடையிலேயே வாங்கி வீட்டிற்கு செல்லுதற்குள் கரைந்து போய் வெல்லம் இல்லை என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிற வகையில் அந்த மண்டை வெல்லத்தினுடைய வண்டவாளம் இருந்தது.
இந்தாண்டு பொங்கல் கொள்முதல் நிலை என்ன என்று அரசு தெளிவாக நீதிமன்றத்திலே கூறுவதற்கு முன் வருமா அல்லது, மக்கள் மன்றத்திலே கூறுவதற்கு முன் வருமா, சட்டமன்றத் திலே கூறுவதற்கு முன் வருமா ஏனென்றால் இன்னும் ஒரு மாதம் உள்ளது.
அரசு தொடர் நடவடிக்கையில், இன்றைக்கு நீதிமன்றத்தி லேயே தாக்கல் செய்ய வேண்டிய விவரங்களை எல்லாம், இன்றைக்கு மக்கள் அதை தெரிந்து கொண்டு அதை இன்றைக்கு ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஆகவே, இன்றைக்கு இந்த வழக்கு குறித்து, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்ய நீதியரசர்கள் உத்தரவிட்டு, விசாரணை வருகிற ஏழாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருக்கிறார்கள்.
ஆக இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளை வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்யாமல், விவசாயிடமிருந்து கொள்வது செய்ய உத்தரவிட வேண்டும் என்பதற்கு நீதியரசர்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்.

கடந்த பொங்கல் பரிசு தொகுப்பில் செய்து இருக்கிற குளறுபடிகளுக்கு, சாட்சிகளே தேவையில்லை.கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வாங்கியவர்கள் எல்லோரும் சாட்சியாக இருக்கிறார்கள் .ஆகவே, இந்த அரசு வருகிற ஆண்டிலாவது, பொங்கல் பரிசு பொருட்களை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலே , எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து வழங்கி இலக்கணம் படைத்து போல, இந்த ஆண்டாவது மக்கள் எதிர் பார்ப்பது போல  இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க  முன்வர வேண்டும் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top