Close
ஏப்ரல் 5, 2025 11:48 காலை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்.. பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்று ஜெ. படத்துக்கு மலர் அஞ்சலி

ஈரோடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தவர் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி பிரிந்தார். அவரது ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், மேற்கு ஒன்றியசெயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, வடக்கு ஒன்றிய  செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் தலைமையில்
விஜயமங்கலம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, திங்களூர்,போல நாயக்கன்பாளையம், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், குன்னத்தூர் நால்ரோடு, போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னிமலை வடக்கு ஒன்றியம் சார்பில் பனியம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளக்காட்டூர் பகுதியில் ஒன்றிய  செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் போலீஸ் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் வழியாக குன்னத்தூர் நால் ரோட்டில்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு அண்ணா சிலை வழியாக மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மெளன ஊர்வலமாக நடந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஈரோடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி பெருந்துறையில் மௌன ஊர்வலம் சென்ற அதிமுகவினர்

இந்நிகழ்ச்சியில்,  பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன்,கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக செயலாளர் கே.எம். பழனிச்சாமி, பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், காஞ்சிக்கோயில் பேரூர்  செயலாளர் சிவசுப்பிரமணியம்.

பள்ளபாளையம் பேரூர் செயலாளர் கமலக்கண்ணன், நல்லாம்பட்டி பேரூர் செயலாளர் துரைசாமி, பெத்தாம் பாளையம் போரூர்  செயலாளர் பூபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொன்னுத்துரை, முன்னாள்  அவை தலைவர் டி.டி. ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்னுசாமி, மாவட்ட  இணைச்செயலாளர் மைனாவதி கந்தசாமி.

அவைத் தலைவர் பொன்முடி சந்திரசேகரன், எம்ஜிஆர் மன்ற அவை தலைவர் ஏ கே சாமிநாதன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திங்களூர் எஸ் கந்தசாமி, ஒ.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் அப்புகுட்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேட்டுவபாளையம் அருணாச்சலம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் வடிவேலு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்லசாமி.

மாவட்ட கலை பிரிவு செயலாளர் தங்கவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரொட்டி பழனிசாமி, விஜயலட்சுமி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயபுரி சீனிவாசன், குள்ளம்பாளையம் அர்ஜுனன், கம்பளியம்பட்டி பூபாலன், பெரிய வீர சங்கிலி ராதாமணி சிவகுமார்.

பாண்டியம்பாளையம் செல்வமணி நாகேஸ்வரன், முள்ளம்பட்டி சிவகாமி குழந்தைசாமி,கரண்டிபாளையம் செல்வராஜ், போல நாயக்கம்பாளையம் சரஸ்வதி சோமு, பாப்பம்பாளையம் சரோஜா, கல்லாகுளம் வளர்மதி, தோரணவாவி ஈஸ்வரி,  மூங்கில்பாளையம் ஜானகிராமன்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வளர்மதி செல்வராஜ், புனிதவதி, கோமதி, குணசேகரன், சாமிநாதன், பேரூர் மகளிர் அணி செயலாளர் மோகனாம்பாள், கழக மகளிர் அணி இணை செயலாளர் மோகனச்செல்வி துணைச் செயலாளர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர் களும் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top