Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

மாண்டஸ் புயல்: பொது மக்களுக்கு உதவ தயாராகும் தமாகா இளைஞரணி

தமிழ்மாநில காங்கிரஸ்

தமாகா மாநில இளைஞரணித்தலைவர் எம். யுவராஜா

மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவ தமாகா  தயாராக இருக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர்  எம்.யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து பிறகு சற்று வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாலை, கள்ளக்குறிச்சி,கடலூர் தருமபுரி, சேலம், நாமக்கல்,திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நிவர், கஜா போன்ற பல புயல்கள் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய போது த.மா.கா இளைஞரணியை சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்துள்ளோம். அதேபோல் இப்போதும் பொதுமக்களுக்கு உதவுகிற வகையில் த.மா.கா இளைஞரணியை சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொடர்ச்சியாக புயலால் பாதிக்கப்படும் போதெல்லாம் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் புயலின் தாக்கம் ஏற்பட்ட போது பொதுமக்களுக்கு உதவுகின்ற முதல் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வந்துள்ளது.

அதுபோல அடுத்த இரண்டு நாட்களுக்கு புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் அருகாமையில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பால், உணவு, குடிநீர், போர்வை மற்றும் மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்வதாக  யுவராஜா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top