Close
நவம்பர் 22, 2024 6:26 காலை

கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழா… தொடர் சர்ச்சையில் திமுக நிர்வாகி

ஈரோடு

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலர் மகன் பிறந்தநாளை கொண்டாடிய கட்சியினர்

நம்பியூரில் கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்  திமுக மாவட்ட செயலர்  நல்லசிவம். அதிருப்தியில் கட்சியினர்.

நம்பியூரில்  திமுக கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழா கொண்டாடியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்ட திமுக.வில் கோஷ்டி பூசல்,வாரிசு அரசியல் என்பது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கோபி குள்ளம்பாளையத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், இங்கு நடக்கும் நிகழ்வுகளை  வாட்ஸ் ஆப் மூலம் பரப்பி வருகின்றனர். இதனால் தான், முக்கிய நிர்வாகிகளை மட்டும் இங்கு வர சொல்லி இருக்கிறேன்.

வாட்ஸ் ஆப்பில் யார் எடுத்து அனுப்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். தலைமையில் சொல்லி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என பேசியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து  டிச.4  -ஆம் தேதி  திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் மகன் கவிபிரியன் பிறந்த நாளை, நம்பியூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் வைத்து கோலாகலமாகக் கொண்டாடினர். கட்சி அலுவலகத்தில் தலைவர், மாவட்டச் செயலாளரின் பிறந்த நாளை கொண்டாடலாம்.

மாவட்டச் செயலாளரின் மனதை கவருவதற்காக நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய கழக துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அல்லாபிச்சை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் முருகசாமி, 6 -வது வார்டு செயலாளர் வரதராஜ், எலத்தூர் முருகேசன், நாச்சிபாளையம் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்றவர்கள் பல்வேறு பரிசுப் பொருள்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பிறந்தநாளை கொண்டாடினால்  பரவாயில்லை.

பள்ளியில் படிக்கும் அவரது மகனின் பிறந்த நாளை கட்சி அலுவலகத்தில்  கொண்டாடுவது  எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி கட்சியினர் மத்தியில்  எழுந்ததுடன், அதிருப்தியையும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் கவுந்தபாடியில் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர், திமுக வின் செயல்பாடு கார்பரேட் கம்பெனி போல் இருக்கிறது. அமைச்சர் முத்துசாமி, கட்சியினருக்கு எதுவும் செய்வது கிடையாது என பகிரங்கமாக பேசியுள்ளனர்.

வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இந்த நிகழ்வு  நடந்தது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. மொத்தத்தில் வடக்கு மாவட்ட திமுக வின் பக்கம் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பார்வை திரும்பவில்லை என்றால் பாராளுமன்ற தேர்தல் வெற்றி என்பதது  திமுக வுக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்க வாய்ப்பு உள்ளதாத அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top