Close
நவம்பர் 22, 2024 11:03 காலை

திமுக அரசை கண்டித்து பெருந்துறையில் கொட்டும் மழையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஈரோடு

திமுக அரசை கண்டித்து பெருந்துறையில் கொட்டும் மழையிலும் அதிமுக.சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திமுக.,அரசை கண்டித்து பெருந்துறையில் பேரூராட்சி அலுவலகங்கள் முன் கொட்டும் மழையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், எடிப்பாடி பழனிசாமி‌ ஆணைக்கினங்க பெருந்துறை மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய  செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாள கே.சி கருப்பணன் எம்எல்ஏ பேசுகையில், பெருந்துறை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக., ஆட்சியில் கொண்டு வப்பட்ட அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை திமுக மெதுவாக செயல்படுத்தி வருகிறது.

.இதனால் பெருந்துறை மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் இன்னும் கிடைக்காமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம் உயர்வு வீட்டு வரி, பால் விலை உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.

அதிமுக ஆட்சியில் கஜானா நன்றாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கஜானா காலி ஆகிவிட்டதாக வேண்டும் என்று புகார் தெரிவித்து வருகின்றனர் . 7000 பேருக்கு முதியோர் உதவி தொகையை ரத்து செய்துவிட்டனர் இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் தான் .

தாழ்த்தப்பட்ட பொதுமக்களை திமுக அரசு வஞ்சிறது, என்றார். கொட்டும் மழையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆ்ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் தலைமை வகித்தார்.

பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் கொட்டும் மழையிலும் தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் விடியா திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல் காஞ்சிக்கோயில் பேரூராட்சி அலுவலகம், பெத்தாம்பாளையம் பேரூர் அலுவலகம், நல்லாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பேரூர் செயலாளர்கள் கல்யாண சுந்தரம், பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுத்துரை, பொன்னுசாமி, முன்னாள்  அவை தலைவர் ஜெகதீசன்,பெருந்துறை மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வளர்மதி செல்வராஜ், புனிதவதி, கோமதி, உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top