தி மு க அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
இதில், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றியச்செயலா ளர்கள் பழனிச்சாமி, சிவராஜ், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் மலர்செல்வி, மாவட்ட வர்த்தக அணிசெயலாளர் வெங்கிடுசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.