வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் பொது மக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், பேரூராட்சி சேர்மன் சத்தியவதி பாஸ்கரன், ஒன்றிய, வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.