Close
ஏப்ரல் 5, 2025 11:54 மணி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு விழா

வேலூர்

குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வளத்தூரில் நடந்த விழாவில் பேராசிரியர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த குடியாத்தம் ஒன்றிய குழு பெருந்தலைவர் என்.இ.சத்தியானந்தம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வளத்தூர் பகுதியில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு  விழா நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியகுழுத்தலைவர் என்.இ.சத்தியானந்தம் தலைமையில், பேராசிரியர் அன்பழகனின்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றிய அவைத் தலைவர் தரணிசுந்தர் தலைமை வகித்தார். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வளத்தூர் எஸ்.ராமகிருஷ்ணன் வரவேற்றார். டிவி.சேகர் நவீன், டிஎஸ்.சந்திரன், ஏ.கோபி, புஷ்பா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், கூடநகரம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரதீஷ் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், திரளான கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வளத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.செல்வம் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top