Close
செப்டம்பர் 19, 2024 7:23 மணி

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா

வேலூர்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் இனமான பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா நடந்தது.

இதில்,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர ராஜன்,ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர் கே ரவி, மாவட்ட துணை செயலாளர் ஜி.எஸ்.அரசு, மு.நகர திமுக செயலாளர் மா.விவேகானந்தன் ,நகர  துணைச் செயலாளர் ம.மனோஜ்,  மத்திய தொலைத் தொடர்பு குழு உறுப்பினர் எம்.சத்தியமூர்த்தி.

பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன், அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எம்.முத்து, யு.சரவணன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top