Close
மே 23, 2025 1:57 மணி

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

கோபிச்செட்டிபாளையம்

கோபி நகராட்சியில் குடிநீர்த்திட்டத்தை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதி நகர், முத்து நகர் சின்னச்சாமி வீதி, அனுமந்தரராஜன் கோயில் வீதி, சீத்தம்மாள் காலனி, வேலுமணி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.

இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா, நகர செயலாளர் பிரினியோ கணேஷ், யூனியன் சேர்மன் மௌவுஸ்வரன் கவுன்சிலர் முத்துரமணன், வக்கீல் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top