Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

தமிழகம் பெரியார் மண் என்பது உண்மைதான்.. அதில் சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான்: தொல் திருமாவளவன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன்

தமிழகம் பெரியார் மண் என்பது எப்படி உண்மையோ அதைப் போல  சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான் என்றார் தொல் திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர் தீர்க்கத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு அரசு ஒப்பந்த பணிகளின் பட்டியலில் அனைத்து மக்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது அதிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்படும்

புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடுகிறது. இறையூரில் நடந்த சம்பவம் தலைக்குனிவானது. வெட்கக்கேடானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை கொடுமை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.இருப்பினும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மனித கழிவுகளை கலந்த வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமை இன்றும் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைகள் எடுக்கும் பட்டியலில் அனைத்து மக்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ -க்கள் சட்டமன்றத்தில் இது குறித்து பேசுவார்கள். தேவைப்பட்டால் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வருவார்கள்

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில்தான் இந்த சம்பவத்தில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நல்ல முறையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. இருந்தாலும் பல பகுதிகளில் அதிகார வர்க்கத்தினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக பயன்படுத்துவது இல்லை

அதிகார வர்க்கமும் அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இணைந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் இதை திமுக அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது

தமிழகம் பெரியார் மண் என்பதும் உண்மைதான் அதே போன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்பது உண்மைதான்.

அதிகாரிகள் பல நேரங்களில் ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வன்கொடு மை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே கிடையாதுஅப்படியே வழக்கு தொடர்ந்தாலும் அதனை தள்ளுபடி செய்து விடுகிறார்கள்.

இறையூரில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்வதற்கு காவல்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேர்மையாக செயல்பட வேண்டும்.சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பல நேரங்களில் தலித்துக்கு எதிரான நடவடிக்கைகளை தான் அரசு அதிகாரி கள் எடுக்கின்றனர்

திமுக கூட்டணியில் எந்த விதமான பிரச்னையும் கிடையாது கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு.தலித் மக்களின் விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம் என்பதால் கூட்டணியில் எந்த விதமான சிக்கலும் ஏற்படப் போவது கிடையாது என்றார் தொல். திருமாவளவன். இதில், புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top