Close
நவம்பர் 24, 2024 11:20 காலை

புதுக்கோட்டையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வரலாற்றை   திரிக்கும் வகையிலான புதுக்கோட்டை நகர் மன்றத்தின் தீர்மானம் 524 -ஐ  கண்டித்தும், புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு உருவ சிலையை நிறுவிட வலியுறுத்தியும்   முத்தரையர் சமுதாயத்தை இழித்து   பேசிய சட்ட அமைச்சர்  ரகுபதியை   கண்டித்தும்  இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே   தமிழர் தேசம் கட்சி தலைவர் கே. கே. செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் வீரமணி,  இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் புதுகை காசி, தமிழர் தேசம் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் லதா,  கொள்கை பரப்புச் செயலாளர் மதியழகன், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் குணா.

தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் பி வைரவேல், தமிழர் தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், தமிழர் தேசம் கட்சி  நிர்வாகி தளவாய் ராஜேஷ்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி வீரமுத்து உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top