Close
நவம்பர் 22, 2024 8:02 காலை

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயல்கிறது: இரா. முத்தரசன்

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயல்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் இந்தியாவில் ஒற்றைத் தலைவர் தலைமையிலான அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கே ஆளும் பாஜக முயன்று வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  சென்னையில் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பா.ஜீவானந்தத்தின் 60-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எண்ணூர் விரைவு சாலை காசிமேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அ|ஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

சென்னை

இதில் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர்  இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு தலைவர் பா.ஜீவானந்தம். மிகப்பெரிய புரட்சியாளராகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடி பல ஆண்டுகள் சிறை தண்டனைகளை அனுபவித்தவர் அவர். பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரமும் செய்தவர் ஜீவானந்தம். மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்தவர்.

நாட்டில் வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மதத்தின், கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் ஒற்றை தலைமையிலான அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கு பா.ஜ.க முயல்கிறது.

2023 -ஆம் ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்பிறகு பிறகு மக்களவை தேர்தல் 2024 -ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் நடைபெற்று வரும் ஆட்சிகள் கலைக்க முடியுமா?

1977- ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் கூட நிலையான ஆட்சி பல நேரங்களில் இல்லை. எனவே ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை சித்தாந்தம் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.  எனவேதான் சர்வாதிகாரம் மிகுந்த அதிபர் ஆட்சி முறை என்பதை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  கொள்கைகளுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி குறுகிய சிந்தனை உடன் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே வகுப்புவாதம், கடவுள், மொழி உள்ளிட்டவைகளின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராக மறைந்த தலைவர் ஜீவானந்தம் நினைவு நாளில் உறுதி ஏற்போம் என்றார் முத்தரசன்.

அப்போது கட்சி நிர்வாகிகள்  வீரபாண்டியன், பெரியசாமி,  மகேந்திரன், உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top