Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்

ஈரோடு

கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்  என்றார்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

ஈரோடு வடக்கு மாவட்டம், டி. என். பாளையம் திமுக ஒன்றியம் சார்பில்கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள கள்ளிபட்டியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது.இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 50 க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன

இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் சீறி பாய்ந்த குதிரைகள் கொண்டையம் பாளையம், துறையம் பாளையம், பங்களாபுதூர் வழியாக டி.என்.பாளையம் வரை சுமார் 5 கி.மீ தொலைவுக்கு நடைபெற்றது,

இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெறும் முதல் 4 குதிரை உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன.மேலும் இந்த குதிரை ரேக்ளா பந்தயதிற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் பங்களாபுதூர் காவல் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
திருப்பூர், கோவை, மதுரை, ஈரோடு போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள்  பாதுகாப்பாக உள்ளனர். சிலர் வேண்டுமென்றே  குழப்பம் ஏற்படுத்தி குளிர் காய நினைக்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதைப் போல பழைய வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்தியிலிருந்து வந்த அரசு அதிகாரிகள் வட மாநில தொழிலாளர்களிடம் பேசிய பிறகு வட மாநில தொழிலாளர்களே தமிழ்நாட்டில் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.தற்பொழுது வட மாநிலங்களில் பண்டிகை காலம் என்பதால் தொழிலாளர்கள் பண்டிகைக்காக அவர்களது ஊர்களுக்கு செல்கின்றனர்என்றார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

முன்னதாக அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: முதலமைச்சர் தன்னுடைய பிறந்தநாளை பெரியளவில் கொண்டாட வேண்டாம் என கூறினார். மக்களுக்கு உபயோகமாக இருக்கும் திட்டத்தை வழங்குகள் எனவும் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் தொடர்ந்து ஒரே குற்றச்சாட்டை தான் வைத்து வருகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என கூறிவந்தனர் ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அதை மாற்றிககாட்டி  உள்ளது.

அத்திகடவு- அவிநாசி திட்டம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது .அமைச்சர் துரைமுருகன் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.கூடிய விரைவில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு வரும். யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை. ஈரோடு, திருப்பூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.  சிலர் வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில்,  எம் எல் ஏ வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் நல்லசிவம்,டி.என். பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top