Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

புதுக்கோட்டை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக திருச்சி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்த அதிமுகவினர்

புதுக்கோட்டை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை நகர எல்லையான கவிநாடு கண்மாய்- கட்டியாவயல் சாலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில்,  ஏராளமான அதிமுக தொண்டர்கள்  திரளாக வருகை தந்து சால்வை மற்றும் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-க்கள்  வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், நகர செயலாளர்கள் எஸ்ஏஎஸ்.சேட்,  க.பாஸ்கர்.  ஒன்றிய குழு தலைவர் வீ. ராமசாமி,  9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம். பாபு,  முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு, டவுன் பேங்க் மாரிமுத்து, தாரணி உதயகுமார், ஜீவாசெல்வராஜ், அருண் உள்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top