Close
நவம்பர் 22, 2024 6:20 காலை

தமிழ்பாடத்தில் 50 ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதாத சம்பவம் வரலாற்றி இல்லாத ஒன்று: கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு

கோபி அருகேயுள்ள வெள்ளாளபாளையம் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மாணவிகள்

12 வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரம்  மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வை  எழுதாதது குறித்து ஆய்வு செய்து சரியான காரணங்களை கண்டறிந்து  சட்டமன்றத்தில் அதற்கான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றார்  முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் எம்எல்ஏ.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரியூர் வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்ச கவுண்டம் பாளையம் பகுதியில் சுமார் ரூ 71 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை வசதி தார் சாலை அமைத்தல் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து வெள்ளாளபாளையம் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 50,000 மதிப்பீட்டில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக இருக்கைகளையும்,  பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்களையும் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம்  செங்கோட்டையன் பேசிய தாவது:  12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதத சம்பவம் தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று.

50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்து ஒரு ஆணையம் அமைத்து சரியான விளக்கங்களை தெரிந்து, அரசு சட்டமன்றத்திலே அதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றார்.

ஓ பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இருந்தால் செயல்படுவேன் என தெரிவித்ததற்கும் ,சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளது தொடர்பான  கேள்விக்கும் பதில் அளிப்பதை செங்கோட்டை யன் தவிர்த்து விட்டு    எழுந்து சென்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா, யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன், வெள்ளாள பாளையம் பஞ்சாயத்து தலைவர் சத்தியபாமா வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top