முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி முறைப்படி பொதுச்செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.