வார்டு மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தி நகராட்சி மன்ற உறுப்பினர் அசத்தியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் தூய்மை பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்கி. உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது இதற்காக
மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வாங்கப்படு கிறது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோபி நகராட்சியின் 13 -ஆ வது வார்டில் 21 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி வார்டு கவுன்சிலர் ரேவதி தம்பா அசத்தியுள்ளார்.
நகராட்சி மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் சிசிடிவி காமெரா இயக்கத்தை தொடக்கி வைத்தார். மேலும் வார்டு பகுதி மக்களுக்கு 400 வீடுகளுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகளை வழங்கினார்.
இதில், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்