Close
செப்டம்பர் 19, 2024 7:13 மணி

மத்திய, மாநில அரசுப்பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த சி பி எம் எல் மக்கள் விடுதலை டெல்டா மண்டல மையக்குழ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலர் க.சி.விடுதலைக்குமரன்

தமிழ்நாட்டின் ஒன்றிய, மாநில அரசு பணிகள் அனைத்தையும் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென சி பி எம் எல் மக்கள் விடுதலை டெல்டா மண்டல மையக்குழு வலியுறுத்தியுள்ளது.

 கம்யூனிஸ்ட் கட்சி மா லெ மக்கள் விடுதலை டெல்டா மண்டல மையக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்  தஞ்சாவூர் மக்கள் விடுதலை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை தலைவர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். கட்சியின் தலைவர் ஜெ.சிதம்பரநாதன் ஒன்றிய பாசிச மோடி அரசின் இந்துத்துவாமய, சிறுபான்மை மதத்தினர் மற்றும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள், ஏழை, எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் , இந்நிலைமைகளை முறியடிக்க கம்யூனிஸ்டுகள், ஐனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தி பேசினார்.

பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் பங்கேறு நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் டெல்டா மண்டல நிர்வாகிகள் தே.ராமர்,கவிஞர் பாட்டாளி, வீ.வீரக்குமார், பழ. ராஜா , செ.அருண்குமார் அ.கணேசன், எஸ் .பி.மனோகர், வி.பாஸ்கர், வெண்மணி செல்வராஜ், துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல நூறு டிஎம்சி மழைத் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை சேமித்து வைக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள், ஊருணிகள், குட்டைகள் உள்ளிட்ட 42,000 -ம் நீர் வள ஆதாரங்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரப்பட வேண்டும் , கல்லணை கால்வாய் ஆறுகளில் இருபுறம் கரைகளில் சிமெண்ட் பூசலாம், ஆனால் தண்ணீர் ஓடக்கூடிய தரைத் தளங்களில் சிமெண்ட் தளம் அமைப்பதால் ஆற்றில் வரும் தண்ணீரில் வண்டல் மண், களிமண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்வள ஆதாரங்கள்,  நுண்ணுயிர் பெருக்கிகள் இயற்கையாக நிலங்களில் சென்றடைவதற்கு தடையாக உள்ள சிமெண்ட் தரைத் தளம் அமைப்பதையும்,  மக்கள் வரிப்பணம் வீணாக செலவு செய்வதையும் பொதுப்பணித் துறை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 114 அணைகளில் ஒரு அடி தண்ணீர் தேக்கினால் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்ற  நீர் வள நிபுணர்கள் ஆலோசனைகளையும் ,வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகமாக மழைநீர் பெறுவதற்கு நிபுணர்கள் ஆலோசனைகளை பெற்று அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கோடை காலத்தில் குடிநீர் தேவைக்கும், ஆடு , மாடுகள் தண்ணீர் தேவைகளுக்கும் அவ்வப்போது முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும், வேளாண் துறை அறிக்கையில் விவசாய கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பது போதாது, தரைத்தளங்கள், நடைபாதை,பாசன வாய்க்கால்கள் தேவைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விளை பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிரூட் டப்பட்ட அறைகள் அதிக அளவில் திறக்கப்பட வேண்டும், வருகிற லெனின் பிறந்தநாளான ஏப்ரல் 22 அன்று தமிழ்நாட் டில் உள்ள ஒன்றிய, மாநில அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என வலியுறுத்தி மாநிலம் தழுவிய கருத்தரங்கம் தஞ்சையில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன் லைன் தடை சட்டத்தை ஆளுநர்  தாமதிக்காமல்  ஒப்புதல் அளித்து அதற்கு தடை விதிக்க அனுமதிக்க வேண்டும்.  ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களை கொடுமைகளுக்கு உள்ளாக்கும், வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு மூடு விழா நடத்தி, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களின்  கம்யூனிஸ்ட் கட்சி மாலெமக்கள் விடுதலை டெல்டா மண்டல மையக்குழு ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top